என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்காதலியை அனுப்பாததால் பெண்ணை அவதூறாக பேசி தாக்குதல்- வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராணிப்பேட்டை அருகே கள்ளக்காதலியை தன்னுடன் அனுப்பாததால் அவருடைய சகோதரியை அவதூறாக திட்டி தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை சிப்காட்டை அடுத்த நரசிங்கபுரம் சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் (வயது 28). இவரும் சோளிங்கர் பகுதியை சேர்ந்த ரம்யா (25) என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தாமஸ் ஆல்வா எடிசனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தையும் உள்ளது.

    அதே போல் ரம்யாவுக்கும் அருண் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் குடும்ப வாழ்க்கை கசந்ததால் அருணிடமிருந்த ரம்யாவும், முன்னாள் காதலனான தாமஸ் ஆல்வா எடிசனும் சேர்ந்து ஒரு வருடத்துக்கு முன் அருணை கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    கள்ளக்காதல் ஜோடியான இருவரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். பின்னர் 2 பேரும் வெளியே வந்த பிறகு, திரும்பவும் தங்கள் கள்ளத்தனமான உறவை தொடர்ந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாமஸ் ஆல்வா எடிசனும், ரம்யாவும் ஒன்றாக பெங்களூருவுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரம்யா, சிப்காட் ராஜீவ் காந்தி நகரில் உள்ள தனது சகோதரி லதா என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் தாமஸ் ஆல்வா எடிசன், லதாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் ரம்யாவை அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு லதா மறுக்கவே, லதாவை தாமஸ் ஆல்வா எடிசன் அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து லதா சிப்காட் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து தாமஸ் ஆல்வா எடிசனை சிாப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×