என் மலர்
செய்திகள்

கைது
திருநின்றவூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருநின்றவூர் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
திருநின்றவூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து அம்பத்தூர் காவல் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் தீபா சத்யன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருநின்றவூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சென்னை பெரம்பூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) மற்றும் லாரன்ஸ் (21) ஆகிய இருவரும் திருநின்றவூர், முத்தாபுதுபேட்டை அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 15 பவுன் நகைகள், 2 மொபட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story