என் மலர்

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    பெரம்பலூர் அருகே விபத்தில் விவசாயி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெரம்பலூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அருமடல் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலை அருகே சென்றார். அப்போது அந்த சாலையை கடந்த சுவர் விளம்பரம் எழுதும் தொழிலாளியான நெல்லை மாவட்டம் களக்காடு கே.கே.புரம் தென்றல் நகரை சேர்ந்த ஜான்சுரேஷ்பாபு (60) மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜான்சுரேஷ்பாபுவும், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த செல்வராஜும் படுகாயமடைந்தனர். இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த செல்வராஜ், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செல்வராஜ் உயிரிழந்தார். ஜான்சுரேஷ்பாபு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×