என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  நல்லம்பள்ளி அருகே கார் மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நல்லம்பள்ளி அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  நல்லம்பள்ளி அடுத்த வடக்குதெரு கொட்டாவூரை சேர்ந்தவர் குப்பன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் பெரிய வீட்டுகொட்டாய் பகுதியில் உள்ள தனியார் பால் கொள்முதல் நிலையத்தில் பால் ஊற்றி விட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த கார் குப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×