என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  ஜமுனாமரத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுப்பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜமுனாமரத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுப்பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.
  ஜமுனாமரத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27), ராணுவ வீரர். இவருக்கும் சென்னையை சேர்ந்த மகாலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளான இவர்கள் மோட்டார் சைக்கிளில் ஜவ்வாதுமலையில் உள்ள காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட சென்றனர். பிறகு அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூருக்கு சென்றனர்.

  ஜமுனாமரத்தூர் மலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் அய்யப்பனின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது.

  இதில் மோட்டார் சைச்கிளின் பின்னால் அமர்ந்து வந்த மகாலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் அய்யப்பனின் காலில் விழுந்ததில் அவரது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகாலட்சுமி பரிதாபமாக உயிழந்தார். அய்யப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

  இதுகுறித்த புகாரின் பேரில் ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×