என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மாண்டிவிளையில் காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார்.
  மணவாளக்குறிச்சி:

  அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் ஜெனில் (வயது 30), எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மோனிஷாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.

  இதற்கிடையே ஜெனிலுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஜெனிலுக்கும், அவருடைய மனைவி மோனிஷாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் நிலவியதால், மோனிஷா பிரிந்து சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் ஜெனில் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்தனர்.

  அப்போது படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் ஜெனில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

  இதுகுறித்து மாசிலாமணி மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஜெனிலின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×