என் மலர்
செய்திகள்

நகை பறிப்பு
கல்லூரி மாணவரிடம் நகை, பணம் பறிப்பு- 3 மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
நாசரேத் அருகே கல்லூரி மாணவரிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாசரேத்:
நெல்லை மாவட்டம் சி.என் கிராமத்தை சேர்ந்தவர் சங்குத்துறை. இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 22). இவர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் வணிகவியல் மேற்படிப்பு படித்து வருகிறார். ஊரடங்கு அமலில் உள்ளதால் இவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
கடந்த 8-ந் தேதி நெல்லையிலிருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு தனது பாட்டியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக, ஸ்ரீவைகுண்டம் பாலம் அருகே நின்று கொண்டிருந்த 3 பேரிடம் விசாரித்துள்ளார். பெட்ரோல் பங்கை காண்பிப்பதாக கூறிய அவர்கள், தங்கள் பின்னால் வருமாறு மோட்டார் சைக்கிளில் முன்னால் சென்றுள்ளனர். ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செங்குளம் குளத்துகரை பக்கத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, சுபாஷ் சந்திர போசை மிரட்டி 2 பவுன் தங்கசங்கிலி, ஒரு பவுன் மோதிரத்தை பறித்துள்ளனர். ஏ.டி.எம். கார்டை பறித்து, ரூ.3 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். மொபைல் போனை பறித்து, அதை உடைத்து விட்டு, 3 பேரும் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த முத்துராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 நபர்களை தேடிவருகின்றனர்.

Next Story