என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கீரனூர் அருகே பெண் மரணத்தில் மர்மம் - தந்தை போலீசில் புகார்
கீரனூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கீரனூர்:
கீரனூரை அடுத்த இராக்கதம் பட்டியை சேர்ந்தவர் குருநாதன் (வயது 30). விவசாயி. இவரது மனைவி சூர்யா (22) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 9-ந்தேதி இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சூர்யாவின் தந்தை அர்ஜுனன் உடையாளிப்பட்டி போலீசாரிடம், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. டெய்சி குமார் நேரில் விசாரணை நடத்தினார்.
Next Story