என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கயத்தாறு அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  கயத்தாறு:

  கயத்தாறு அருகே அய்யனார் ஊத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பூல்பாண்டி (வயது 30). இவருடைய மனைவி பிரேமா (27). இவர்களுக்கு முகிலா (4), புவனேஸ்வரி (3) என்ற பெண் குழந்தைகளும், 1 வயதில் கோபி என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பூல்பாண்டி கேரளா மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கருப்புக்கட்டி வியாபாரம் செய்து வந்தார். தற்போது ஊரடங்கால் சரியாக வியாபாரத்துக்கு செல்லவில்லை. இதனால் மன உளைச்சலில் வீட்டிலேயே இருந்தார். 

  இதில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பூல்பாண்டி அடிக்கடி மது குடித்ததாகவும், இதனை பிரேமா கண்டித்ததாகவும் தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த பூல்பாண்டி மதுபோதையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

  இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்தார். பூல்பாண்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×