search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாப்பாக்குடி அருகே குடிநீர் கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

    பாப்பாக்குடி அருகே குடிநீர் கேட்டு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள இடைகால் ஊராட்சிக்கு உட்பட்ட பனையங்குறிச்சி கிராமத்தில் சுமார் 500 வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அந்த கிராமத்தின் வழியாக வாசுதேவநல்லூர் செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வரும் நீரை அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போது அந்த கிராம மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

    பின்னர் அந்த இடத்தில் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சினை சரிசெய்ய வேண்டும். அந்த பகுதியில் ஒரு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என கோரி திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார், கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக 
    காணப்பட்டது.
    Next Story
    ×