search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாமக்கல்லில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    நாமக்கல்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது முபின் தலைமை தாங்கினார். 

    மாவட்ட செயலாளர் தவுலத்கான் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மணிமாறன், ஆதித்தமிழர் பேரவையின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் முகமது அலி நன்றி கூறினார்.

    Next Story
    ×