என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  சாணார்பட்டி அருகே விபத்தில் பெண் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாணார்பட்டி அருகே விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோபால்பட்டி:

  திண்டுக்கல் அனுமந்த நகர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் சிங்கராயர். அவருடைய மனைவி ரீட்டாமேரி (வயது 50). நேற்று முன்தினம் இவர், தனது மகன் ஜோசப்புடன் (24) திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாணார்பட்டி அருகே உள்ள ராகலாபுரம் பிரிவில் முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்திச்செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது நிலை தடுமாறி ரீட்டாமேரியும், ஜோசப்பும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் ரீட்டாமேரியின் 2 கால்களும் லாரியின் சக்கரத்தில் சிக்கியது. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரீட்டாமேரி இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×