என் மலர்

  செய்திகள்

  லோகேஸ்வரி
  X
  லோகேஸ்வரி

  ராமநாதபுரம் காவல்துறை பயிற்சி முகாமில் தூய்மை பணி செய்த பெண் திடீர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமநாதபுரம் காவல்துறை பயிற்சி முகாமில் தூய்மை பணி செய்த பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். அவருடைய மனைவி லோகேஸ்வரி (வயது 35). ராமநாதபுரம் காவல்துறை பயிற்சி முகாம் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். கணவர் ராஜசேகர் இறந்து விட்ட நிலையில் ஒரு மகன், மகளுடன் வசித்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று காலையில் மகன், மகள் வெளியே சென்றிருந்த நேரத்தில் லோகேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

  இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். லோகேஸ்வரியின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்கொலை செய்து கொண்ட லோகேஸ்வரி சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×