என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வீட்டுமனையை கிரையம் செய்து தருவதாக ரூ.3 லட்சம் மோசடி- வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சின்னசேலம் அருகே வீட்டுமனையை கிரையம் செய்து தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ஜானகிராமன்(வயது 38). இவர் நயினார்பாளையம் மெயின்ரோட்டில் ஏர் கம்ப்ரசர் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மண்மலை கிராமம் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் செல்வராஜ்(27) என்பவர் வீட்டுமனையை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ.3 லட்சத்தை வாங்கினார். ஆனால் அவர் கூறியபடி குறிப்பிட்ட வீட்டுமனையை கிரயம் செய்தும் தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஜானகிராமன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×