என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கல்பாக்கம் அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 30). கல்பாக்கம் அடுத்த தென்பட்டினம் குப்பத்தை சேர்ந்தவர் ராணி என்ற நந்தினி (25). இருவருக்கும் திருமணமாகி 1½ மாதங்களே ஆகிறது. இருவரும் புதுப்பட்டினத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயபிரகாஷ் நேற்று முன்தினம் அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். வீட்டில் நந்தினி மட்டும் இருந்தார்.வீடு திரும்பிய ஜெயபிரகாஷ் தனது வீட்டின் கதவை தட்டினார். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக அவர் எட்டி பார்த்தார். அங்கு நந்தினி மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். 

    இது குறித்து கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 1½ மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×