என் மலர்
செய்திகள்

ஊட்டி படகு இல்லம்
ஊட்டி படகு இல்லம் திறக்கப்படுமா?- வியாபாரிகள் எதிர்பார்ப்பு
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்து உள்ள நிலையில், அதனை மீட்கும் வகையில் ஊட்டி படகு இல்லம் திறக்கப்படுமா? என்று வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஊட்டி:
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டு, நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு உள்ளன. தற்போது 6 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்து வந்தவர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா தலங்களில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்கள் வீணாகியதோடு, சேதமடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் தேநீர், சாக்லேட், பழங்கள், கம்பிளி ஆடைகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது தவிர சாலையோர வியாபாரிகள் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வராததால் அவர்கள் வருமானம் இன்றி உள்ளனர். மேலும் மாற்று வேலைக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்பதால், குறைந்த எண்ணிக்கையில்தான் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் கொரோனா அச்சத்தால் ஓரிரு நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சிலர் ஒரே நாளில் வந்துவிட்டு திரும்புகின்றனர்.
தோட்டக்கலை பூங்காக்கள் திறக்க அனுமதித்ததை போல் ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் இ-பாஸ் நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர ஆர்வம் காட்டவில்லை. எனவே இ-பாஸ் முறையை ரத்து செய்து வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர வியாபாரம் நடத்துவதற்காக தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் தொகை பெற்றோம். வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். எப்போது பழைய நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து உள்ளோம். வழக்கமாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இரண்டாவது சீசனான செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் கணிசமாக வருவார்கள். ஆகவே வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்களை கருத்தில் கொண்டு மற்ற சுற்றுலா தலங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story