search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தேவதானப்பட்டி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேவதானப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). கட்டிட தொழிலாளி. இவர் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியில் வசிக்கும் தனது மகள் சசிகலா வீட்டில் தங்கி காட்ரோட்டில் வேலை செய்து வந்தார். 

    தேவதானப்பட்டி பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள மஞ்சளாற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையே சம்பவத்தன்று சுப்பிரமணி வேலை முடிந்து, காட்ரோட்டில் இருந்து தனது மகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கெங்குவார்பட்டி மயானம் அருகில் அவர் வந்தபோது, மஞ்சளாற்றை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×