என் மலர்
செய்திகள்

தி.நகரில் போதையில் தகராறு: வாலிபர் குத்தி கொலை நண்பர் வெறிச்செயல்
சென்னை:
சைதாப்பேட்டையில் நடைபாதையில் வசித்து வருபவர் நாராயணன்.
38 வயதான இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நாராயணன் தனது நண்பர்கள் சிலரோடு மது குடித்துள்ளார். நாராயணனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் நாராயணன் கத்தியால் குத்தப்பட்டார். கழுத்தில் கத்தி குத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே நாராயணன் உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தி.நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தி.நகர் நியூபோக் ரோட்டில் வைத்துதான் நாராயணன் நண்பர்களோடு சேர்ந்து மது குடித்துள்ளார். அங்கு வைத்துதான் கொலையும் நடந்துள்ளது.
இதையடுத்து நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நண்பர்கள் சிலரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.