என் மலர்

    செய்திகள்

    விஷால்
    X
    விஷால்

    பா.ஜனதாவில் இணைகிறேனா?: நடிகர் விஷால் விளக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
    நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இதையடுத்து அரசியலிலும் கால்பதிக்க துடித்தார். அதன்படி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது பரபரப்பானது.

    தற்போது வரும் 2021 சட்டமன்றத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு தமிழக கட்சியும் தங்கள் பலத்தை நிரூபிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல அரசியல்வாதிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் செயலையும் செய்து வருகின்றனர். கட்சியில் இல்லாத பலர் தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்தும் வருகின்றனர்.

    இந்நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும், பா.ஜனதா தமிழக தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன. இதுகுறித்து நடிகர் விஷால் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘தான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை’’ எனத் தெரிவித்தார்.
    Next Story
    ×