என் மலர்
செய்திகள்

கொரோனா தொற்று
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 93 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 93 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 7761 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 7,668 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,772 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 860 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் 93 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு 7761 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் சிறுவங்கூர் மெடிக்கல் கல்லூரி கட்டிடத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story