என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவர், மகன்கள் பேசாததால் விபரீத முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கெங்கவல்லி அருகே கணவர், மகன்கள் பேசாததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  கெங்கவல்லி:

  கெங்கவல்லி அருகே கவுண்டம்பாளையம் வடக்கு மலை அடிவாரத்தில் வசிப்பவர் எட்டியண்ணன். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வியிடம் கணவர் மற்றும் 2 மகன்களும் அடிக்கடி பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்துள்ளார். 

  இதன் காரணமாக கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தமிழ்ச்செல்வி வீடு திரும்ப வில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால், கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் எட்டியண்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 
  விசாரணை நடத்தினர். 

  இந்த நிலையில் நேற்று பைத்தூர் வைத்துமலை அடிவாரத்தில் ஒரு மரத்தில் பெண் பிணம் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அது மாயமான தமிழ்ச்செல்வி என்பதும், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர், மகன்கள் பேசாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×