என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  வடமதுரை அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடமதுரை அருகே லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது மணப்பாறையை சேர்ந்த செல்வக்குமார்(35), கொம்பேறிபட்டியை சேர்ந்த ராஜரத்தினம்(60), மம்மாணியூரை சேர்ந்த வெள்ளைச்சாமி(45) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.2500 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதேபோல அய்யலூர் அருகில் உள்ள பழதோட்டத்தை சேர்ந்த நாகராஜ்(40) உள்பட 2 பேரை இன்ஸ்பெக்டர் கருப்புசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், ராஜா, ராஜகணேஷ் ஆகியோர் கைது செய்தனர்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபகுதியில் லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த கம்ப்யூட்டர் மற்றும் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

  தொடர்ந்து லாட்டரி வியாபாரிகள் கைதாகி வருவதால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

  இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனைக்கு அனுப்பிய விபரமும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே மேலும் பலர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×