என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  உளுந்தூர்பேட்டை:

  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் மகன் ராமச்சந்திரன் (வயது 34). லாரி டிரைவர். சம்பவத்தன்று ராமச்சந்திரன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தபாபு, சாமி வேல் ஆகியோரும், செம்பியன்தேவி கிராமத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து, ஒலையனூருக்கு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

  மோட்டார் சைக்கிளை சாமிவேல் ஓட்டினார். அப்போது, சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒலையனூர் தனியார் பெட்ரோல் பங்க்கு அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போன்று வந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சாமிவேல் மினி லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தார்.

  அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தடுப்பு கட்டைமீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆனந்தபாபு, ராமச்சந்திரன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சாமிவேல் காயமின்றி தப்பினார். படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனந்தபாபு மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×