என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  மண்ணச்சநல்லூர் அருகே லாரி மோதி வாலிபர் உடல் நசுங்கி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மண்ணச்சநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  சமயபுரம்:

  மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குமரகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் ராமுவின் மகன் ராகவன் (வயது 23). இவர் நேற்று காலை தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் மண்ணச்சநல்லூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அத்தாணி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை அவர் முந்த முயன்றார். அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தாயார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

  இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் ராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  Next Story
  ×