என் மலர்

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி ரெயில்வே ஊழியர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதிய விபத்தில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இருந்தார்.
    கடத்தூர்:

    கடத்தூர் அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் பிரசாத் (வயது 30). ரெயில்வே ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளனர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோட்டில் இருந்து பணி மாறுதல் பெற்று பொம்மிடி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். 

    இந்தநிலையில் நேற்று பிரசாத் கடத்தூரில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். வீரகவுண்டனூர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 வாகனத்தில் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×