என் மலர்

  செய்திகள்

  தேர்வு
  X
  தேர்வு

  நீட் தேர்வு- நெல்லை, தென்காசியில் 7460 பேர் எழுதுகிறார்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீட் தேர்வை நெல்லை மாவட்டத்தில் 6,792 பேரும், தென்காசி மாவட்டத்தில் 668 பேரும் எழுத உள்ளனர்.
  நெல்லை:

  தமிழகம் முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை (13-ந்தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

  இதற்காக நெல்லை மாவட்டத்தில் 17 பள்ளிகளும், தென்காசி மாவட்டத்தில் 3 பள்ளிகளும் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

  நெல்லையில் சாரதா பெண்கள் கல்லூரி, புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, ராஜாஸ் என்ஜினீயரிங் கல்லூரி, புனித அந்தோணி மெட்ரிக் பள்ளி, ஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் சில்வர் ஜுப்ளி மெட்ரிக் பள்ளி, எஸ்.ஏ.வி. கிருஷ்ணா பள்ளி, பிரான்சிஸ் சேவியர் சி.பி.எஸ்.சி. பள்ளி, ஐன்ஸ்டின் கலைக்கல்லூரி, ரோஸ்மேரி பள்ளி, வி.எஸ்.ஆர். இன்டர்நே‌ஷனல் பள்ளி, கென் பிரிட்ஜ் பள்ளி, புஷ்பலதா மெட்ரிக் பள்ளி, ஸ்காட் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளிட்ட 17 மையங்களில் தேர்வு நடக்கிறது.

  தென்காசியில் ஏ.வி.கே. இண்டர்நே‌ஷனல் பள்ளி, வேல்ஸ் பப்ளிக் பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளிகளில் தேர்வு நடக்கிறது.

  இந்த 20 தேர்வு மையங்களில் மொத்தம் 7,460 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தில் 6,792 பேரும், தென்காசி மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் 668 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

  இதனையொட்டி தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

  தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

  தேர்வு எழுதும் மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வறைக்கு வரவேண்டும் எனவும், அறைக்குள் மாணவர்கள் செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இது தவிர தேர்வு எழுத வருபவர்கள் தவிர மாணவர்களின் பெற்றோர் உள்பட வேறு யாருக்கும் அனுமதி இல்லை. மாணவர்கள் கண்டிப் பாக முக கவசம் அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.

  மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்பு கைகளை நன்றாக கழுவி செல்ல அனைத்து தேர்வு மையங்கள் முன்பும் சானிடைசர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Next Story
  ×