என் மலர்

  செய்திகள்

  தற்கொலை செய்துகொண்ட அனிதா - ஜோதிஸ்ரீதுர்கா
  X
  தற்கொலை செய்துகொண்ட அனிதா - ஜோதிஸ்ரீதுர்கா

  அனிதா முதல் ஜோதி துர்கா வரை- நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீட் தேர்வில் தோல்வி, அச்சம் காரணமாக தொடரும் தற்கொலைகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  சென்னை:

  கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொறு ஆண்டும் நீட் தேர்வு தொடங்கும் போதும் இந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வால் எத்தனை மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள போகிறார்களே என்ற அச்சம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  நீட் நுழைவு தேர்வு தோல்வி காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் விழுப்புரம் மாணவி பிரதிபாவும் தற்கொலை செய்து கொண்டார்.

  நீட் தேர்வால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

  இந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் நுழைவு தேர்வில் தோல்வியடைந்த தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைசியாஸ்ரீ (வயது 17) என்ற மாணவி நீட்தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

  சாதாரண மீனவ குடும்பத்தில் பிறந்த இந்த மாணவி டாக்டராக வேண்டும் என்ற கனவுகளுடன் நீட் தேர்வை எழுதினார். தேர்வு முடிவில் வைசியஸ்ரீக்கு குறைந்த மதிப்பெண்ணே கிடைத்தது. இதன் காரணமாக தன்னால், டாக்டருக்கு படிக்க முடியாதே? டாக்டராகும் கனவு தகர்த்து விட்டதே? என வைசியஸ்ரீ மனவேதனை அடைந்தார்.

  இதனால் மிகவும் சோகத்தில் இருந்த வைசியஸ்ரீ, வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

  இந்நிலையில் இன்று மதுரையில் நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

  நீட் தேர்வு தோல்வி, அச்சம் காரணமாக தொடரும் தற்கொலைகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


  Next Story
  ×