என் மலர்
செய்திகள்

தற்கொலை
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் பழ வியாபாரி தற்கொலை
வெள்ளிச்சந்தை அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பழ வியாபாரி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே மேற்கு சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (வயது 40). இவர் வெள்ளிச்சந்தை சந்திப்பில் உள்ள நிலவடிகுளம் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக கிருஷ்ண பிரசாத்தின் கடையில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக கிருஷ்ணபிரசாத் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிருஷ்ணபிரசாத் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story