search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே
    X
    அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே

    தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்? - அனில் சகஸ்ரபூதே கேள்வி

    அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்? என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்கிடையே பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்கமுடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தாக கூறப்படுகிறது.

    பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. 

    இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக, பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு தவறானது. ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையின் போது ஏஐசிடிஇ தனது முடிவை தெரிவிக்கும் என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர் அனில் சகஸ்ரபூதே கூறியுள்ளார்.

    மேலும், அண்ணா பல்கலை. துணைவேந்தருக்கு எழுதிய கடிதத்தில் அரியர் ரத்து தவறான முடிவு என கூறியுள்ளேன். அரியர் தேர்வு பற்றி தமிழக அரசு தரப்பில் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று ஏஐசிடிஇ தலைவர் அனில்  சகஸ்ரபூதே தெரிவித்துள்ளார்.

    அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
    Next Story
    ×