என் மலர்

    செய்திகள்

    கடை கொள்ளை
    X
    கடை கொள்ளை

    கும்மிடிப்பூண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கும்மிடிப்பூண்டி அருகே கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குஷிமா (வயது 28). இவர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று காலை அவரது தந்தை சோயாப் (56) வழக்கம் போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமரா திருடப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×