என் மலர்

  செய்திகள்

  மெட்ரோ ரெயில்
  X
  மெட்ரோ ரெயில்

  சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நாளை முதல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
  சென்னை:

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

  அந்த வகையில், மெட்ரோ ரெயில் சேவையை கடந்த 7 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, சுமார் 166 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பெரு நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் கடந்த 7ந்தேதி முதல் தொடங்கியது. காலை 7 மணி முதல் 8 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது.

  இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயங்கும் எனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×