என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சேந்தமங்கலம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தாயாரின் 2-வது கணவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேந்தமங்கலம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அவரது தாயாரின் 2-வது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டத்தையன்குட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாயார் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியை  சேர்ந்த லாரி டிரைவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் குழந்தைகளுடன்  வசித்து வந்தார்.

    கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி தாயார் வேலைக்கு சென்று விட்டார்.  சிறுமி மட்டும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த  தாயாரின் 2-வது கணவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக  கூறப்படுகிறது.
     
    இது குறித்து சிறுமி தாயாரிடம் தெரிவித்து உள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேள்விபட்ட அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமியின் உறவினர்கள் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாயாரின் 2-வது கணவரான லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×