search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
    X
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

    ஊரடங்கு தளர்வால் ஆபத்து : மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் - விஜயகாந்த் வேண்டுகோள்

    ஊரடங்கு தளர்வால் ஆபத்துக்களும் உள்ள நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், வருமுன் காப்போம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றி வருகிறது. ஆனால், தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு நீக்கம் உள்ளிட்டவைகளால் பெரும்பான்மையான துறைகள் செயல்பட தொடங்கி உள்ளது.

    மக்கள் அனைவரும் இதனை சுதந்திரமாக உணர்ந்தாலும், இதில் பல்வேறு ஆபத்துக்களும் உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை கொரோனா தாக்கம் அதிக அளவில் இருக்கும் என பல்வேறு கருத்துகள் வெளியாகி உள்ளது. எனவே நோய் பாதிப்பை முளையிலேயே கிள்ளி எரிந்துவிட்டால் எந்த பாதிப்பும் இல்லாமல் அனைவரும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளோடு வாழலாம். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, அனைவரும் பாதுகாப்பாக இருப்போம், வருமுன் காப்போம் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×