என் மலர்

  செய்திகள்

  கைது செய்யப்பட்ட சங்கர், ரஜினி ஆகியோரை படத்தில் காணலாம்.
  X
  கைது செய்யப்பட்ட சங்கர், ரஜினி ஆகியோரை படத்தில் காணலாம்.

  மங்களமேடு அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மங்களமேடு அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
  மங்களமேடு:

  பெரம்பலூர் மாவட்ட வனச்சரக அதிகாரி சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சின்னாறு பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.

  இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ரஜினி(வயது 39) மற்றும் குன்னம் வட்டம் நமையூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (59) என்பதும், அவர்கள் உரிய அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

  இது குறித்து வனச்சரக அதிகாரி சசிகுமார், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், ரஜினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
  Next Story
  ×