என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  சூலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- 2 வாலிபர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  சூலூர்:

  சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 30) டிரைவர். இவர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சூலூரில் இருந்து அப்பநாயக்கன்பட்டி நோக்கி சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் சேலத்தை சேர்ந்த சதீஷ் (22), ஈரோட்டை சேர்ந்த நவீன், உடுமலையை சேர்ந்த லிங்கசாமி ஆகிய 3 பேர் வந்தனர். வண்டியை சதீஷ் ஓட்டினார்.

  இந்தநிலையில் சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ரவி வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். 2 வாகனமும் சுக்கு நூறாக நொருங்கியது. இதைகண்டதும் அங்கிருந்தவர்கள் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் பலத்த காயம் அடைந்த 4 பேரையும் மீட்டனர். அதில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

  இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு படுகாயம் அடைந்து வலியில் துடித்து கொண்டிருந்த 3 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே சதீஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×