என் மலர்

  செய்திகள்

  புகார்
  X
  புகார்

  மின்சாரம் தாக்கி வாலிபர் பலி- போலீசில் தந்தை புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை போலீசில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  சிவகாசி:

  வெம்பக்கோட்டை தாலுகா, செவல்பட்டியைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 50). எம்.புதுப்பட்டியில் உள்ள ஒரு பண்ணை தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் பாண்டியன் (21) கல்லூரியில் படித்து வந்தார்.

  சம்பவத்தன்று தோட்டத்துக்குச் சென்ற அலெக்ஸ்பாண்டியன் மின் கம்பம் பொருத்தும் பணிக்கு உதவியுள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து மகாதேவன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது மகன் சாவுக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் ஜெயக்குமார், ரவி, பத்மநாபன், பெருமாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×