என் மலர்

    செய்திகள்

    நகை கொள்ளை
    X
    நகை கொள்ளை

    அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் 20 பவுன் நகை பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அருப்புக்கோட்டையில் மூதாட்டியிடம் 20 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை கீழவீட்டார் தெருவைச் சேர்ந்தவர் பிள்ளையார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 85). கணவர் இறந்த நிலையில் பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சாப்பாடு கொடுப்பதற்காக பொன்னம்மாளின் வீட்டுக்கு அவரது உறவினர் ராஜலட்சுமி சென்றார். அப்போது அவர் உணர்ச்சியற்ற நிலையில் கிடந்தார். அவரது 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே போலீஸ் துணை சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டி பொன்னம்மாள் வெளிநபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளார். அவரிடம் பணம் மற்றும் நகைகள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் தனியாக இருந்த அவரை தாக்கி நகைகளை அபேஸ் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு வந்து செல்லும் நபர்கள் மற்றும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×