என் மலர்
செய்திகள்

கடைக்கு சீல்
அதிரடி ஆஃபரால் அலைமோதிய கூட்டம்: புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
ஒன்பது ரூபாய்க்கு டி-சர்ட், ரூ. 999-க்கு ஒன்பது சட்டை என்ற சலுகை அறிவிப்பால் துணிக்கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை பெசன்ட் சாலையில் புதிய துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த துணிக்கடையில் ரூ.9-க்கு டி-சர்ட் என்றும், ரூ.999-க்கு ஒன்பது சட்டைகள் எனவும் சலுகை அறிவிக்கப்பட்டது. இதனால் காலை முதலே கூட்டம் கூடத் தொடங்கியது. பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், பலர் முகக்கவசத்தை முறையாக அணியாமலும் இருந்தனர்.
அத்துடன் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் தள்ளிக்கொண்டு கடைக்குள் புகுந்தனர். இதனால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கண்ட காவல்துறையினர் உடனே கடையில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
அத்துடன் கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். மேலும் கடை நிர்வாகத்திற்கு ரூ.2.45 லட்சம் அபராதம் விதித்தனர்.
Next Story