search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு
    X
    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு

    உலக ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்த #HBDSadhguru

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 63-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் 63-வது பிறந்தநாளான இன்று சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    அத்துடன், நதிகள் மீட்பு இயக்கம் தொடங்கப்பட்ட செப்.3-ம் தேதியை நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக கருதி ஈஷா தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் நட்டு சத்குருவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.

    நடிகைகள் கங்கனா ரனாவத், காஜல் அகர்வால், தம்மன்னா, சுஹாசினி மணிரத்னம், நடிகர் சந்தானம், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சத்குருவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் சத்குரு அவர்கள்  வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை அனுபவ பதிவுகளாக பதிவிட்டு தங்களின் வாழ்த்தையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக, தற்போது ட்விட்டரில் #HBDSadhguru என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் 6-வது இடத்திலும் உள்ளது. இதேபோல், #RiverRevitalization மற்றும் #CauveryCalling ஆகிய ஹாஸ்டேக்களும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன.

    கடந்தாண்டு இதே செப்.3-ம் தேதி தான் காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்டது. அதேபோல் 2017-ம் ஆண்டு  'Rally for Rivers' என்ற ‘நதிகள் மீட்பு’ விழிப்புணர்வு பயணமும் மேற்கொள்ளப்பட்டது. 

    காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாய நிலங்களில் 83 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
    Next Story
    ×