என் மலர்

  செய்திகள்

  மெட்ரோ ரெயில்
  X
  மெட்ரோ ரெயில்

  சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் ஓடும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
  சென்னை:

  தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாநிலம் முழுவதும் வரும் 7ம்தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரெயில் இயங்கும் நேரம் குறித்த அறிவிப்பை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

  செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. பரங்கிமலை- சென்ட்ரல் இடையே 9ம் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

  காலை 8 மணி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். நிறுத்தங்களில் 20 வினாடிகளுக்குப் பதிலாக 50 வினாடிகள் ரெயில் நின்று செல்லும். ரெயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பயணிகள் அமர வேண்டும்.

  இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×