என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
    X
    ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.

    கொரோனா சிகிச்சை குறித்து நாராயணசாமி ஆலோசனை

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது.
    புதுச்சேரி:

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், முதல்-அமைச்சரின் செயலாளர் விக்ராந்த் ராஜா, சுகாதாரத்துறை செயலாளரும் கலெக்டருமான அருண், இயக்குனர் மோகன்குமார், இந்திய மருத்துவமுறை இயக்குனர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் தனியார் மற்றும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் அங்கு சிகிச்சைக்கு அனுப்பப்படும் நோயாளிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    Next Story
    ×