என் மலர்
செய்திகள்

விஷம்
பாசமாக வளர்த்த கிளி பறந்துவிட்டதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை
பாசமாக வளர்த்த கிளி பறந்து விட்டதால் மனமுடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் கூடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராமசாமி. இவரது மகள் சுஜித்ரா (வயது 10). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் பச்சைக்கிளியை வளர்த்து வந்தனர்.
மேலும் அதற்கு பழங்கள் உள்ளிட்ட உணவுகளை தினமும் வழங்கி பாசம் காட்டி வந்தனர். கடந்த 22-ந் தேதி காலையில் சுஜித்ரா பச்சைக்கிளிக்கு உணவு வழங்கினார். பின்னர் அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பச்சைக்கிளி வீட்டில் இருந்து வெளியே பறந்து சென்றது. இதனால் ராமசாமி குடும்பத்தினர் பல இடங்களில் பச்சைக்கிளியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த சமயத்தில் கிளி பறந்து சென்றதால் சுஜித்ரா மிகவும் மனமுடைந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்தார். இதனிடையே கிளியை தேடி சென்றவர்கள் வீடு திரும்பிய போது சுஜித்ரா மயங்கி கிடந்தார்.
அப்போது அவர் பூச்சி மருந்து குடித்து இருந்தது தெரியவந்தது. இதையொட்டி அக்கம், பக்கத்தினர் சுஜித்ராவை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுஜித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாசமாக வளர்த்த கிளி பறந்து சென்றுவிட்ட கவலையில் மனமுடைந்து சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் கூடலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story