என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் நாராயணசாமி
    X
    முதல்வர் நாராயணசாமி

    எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா - சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு

    புதுச்சேரி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகர், அமைச்சர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பேரவை கூட்டம் மரத்தடியில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.  இதனையடுத்து  புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்  மரத்தடியில் சுமார் 2.15 மணி நேரம் நடைபெற்றது.

    புதுச்சேரி நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேறியதை அடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சபாநாயகர் அறிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி  சபாநாயகர், அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ.க்கள் தங்களை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 


    Next Story
    ×