search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
    X
    சிறு பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    ரூ.19 கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்

    மீன்கரை பகுதியில் விபத்துகளை தடுக்க ரூ.19 கோடியில் சாலையை அகலப்படுத்தும்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மீன்கரை ரோடு கேரளாவுக்கு செல்லும் முக்கிய சாலையாகும்.டாப்சிலிப், பரம்பிக்குளம், திருச்சூர், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்குசெல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் சரக்குவாகனங்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருவதாகதெரிகிறது. இதற்கிடையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள்நடைபெற்று வருகின்றன.இதை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதைதொடர்ந்து மீன்கரை ரோட்டில் நஞ்சேகவுண்டபுதூர் பிரிவு முதல் தமிழக-கேரளஎல்லையான கோவிந்தாபுரம் வரை சாலை அகலப்படுத்தப்படுத்தும் பணிகள் மும்முரமாகநடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மீன்கரை ரோட்டில் நஞ்சேகவுண்டபுதூர் பிரிவு முதல் கேரள எல்லை வரை தற்போதுசாலை 7 மீட்டர் அகலம் உள்ளது. இந்த சாலையை 10.50 மீட்டருக்குஅகலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இதை தவிர சாலையின் குறுக்கே மழைநீர்செல்லும் வகையில் சிறு பாலங்கள் கட்டப்படுகிறது. அம்பராம்பாளையம்சுங்கத்தில் சாலை சந்திப்பு பகுதி மேம்படுத்தப்படுகிறது. இதற்காக கால்வாய்மற்றும் சிறு பாலம் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மேற்கொள்ள ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.மேலும் பெரியபோது கிராமத்திலும் சாலை சந்திப்பு பகுதி மேம்படுத்தப்படஉள்ளது. தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. சிறுபாலங்கள் கட்டுமான பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×