என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் படுக்கைகள்
    X
    திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் படுக்கைகள்

    திருப்பூரில் தயார் நிலையில் இருக்கும் தற்காலிக மருத்துவமனை

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகள் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக புதிதாக தொற்று இல்லாமல் திருப்பூர் பச்சை மண்டலமாக மாறியது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் மீண்டும் கொரோனா தலைதூக்க ஆரம்பித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் தொற்று உறுதியாகும் நபர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் சிகிச்சை வசதியையும் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தற்காலிக மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில்உள்ள 30க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் சிகிச்சைக்கான வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. தற்போது இந்த தற்காலிக மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட கட்டில்கள், மெத்தைகள் மற்றும் தலையணை போன்றவை தயார் நிலையில் உள்ளன. இதேபோல் குளுக்கோஸ் மருந்து ஏற்றுவதற்கான கம்பிகளும் உள்ளன.

    மாவட்ட நிர்வாகத்தின் இந்த வரும் முன் காக்கும் நடவடிக்கை அனைவரின் பாராட்டையும் பெறும் வகையில் உள்ளது.
    Next Story
    ×