என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி
    X
    அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி

    கடலூரில் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள்

    தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உதவியாளர் நிலையில் இருந்து கண்காணிப்பாளர் நிலைக்கு, பணி அமைப்பு விதிகள் படி பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் இருக்கும்போது, தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க எடுத்துவரும் முயற்சியை கைவிட்டு பணி அமைப்பு விதிகள் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு 15-ந் தேதி (நாளை மறுநாள்) ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    இதற்கு முன்னோட்டமாக கடலூர் கேப்பர் மலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் நேற்று தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து அலுவலத்துக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சரவணன், காவல்துறை துப்புரவு பணியாளர் சங்க மாநில பொருளாளர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டு கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×