என் மலர்
செய்திகள்

முக கவசம்
திருமானூர் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று முகக்கவசம் வழங்கிய தலைமையாசிரியர்
திருமானூர் அருகே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் வீடு, வீடாக சென்று முகக்கவசம், சானிடேசர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா கொரோனா நோய் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் வீடு, வீடாக சென்று மாஸ்க் , சானிடேசர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்
மேலும் அந்த கிராமத்தில் உள்ள தூய்மைபணியாளர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உணவு பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி தமிழரசி தலைமை வகித்தார்.
Next Story






