என் மலர்

  செய்திகள்

  வெட்டப்பட்ட பனைமரம்
  X
  வெட்டப்பட்ட பனைமரம்

  சிவகங்கை அருகே பனைமரங்களுடன் லாரி பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகங்கை அருகே பனை மரத்தை வெட்டி லாரியில் கொண்டு செல்ல முயன்றவர்களுக்கு ரூ.12,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  சிவகங்கை:

  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பனைமரங்கள் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றிச்செல்வதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து சிவகங்கை ஆர்.டி.ஓ. சிந்து மற்றும் சிவகங்கை தாசில்தார் மாலாவதி ஆகியோர் சிவகங்கை- மதுரை சாலையில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியில் பனை மரங்களை ஏற்றிசென்றது தெரிந்தது. இதையடுத்து லாரியுடன் பனைமரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், விடுத்துள்ள அறிக்கையில், சிவகங்கை அருகே பனை மரத்தை வெட்டி லாரியில் கொண்டு செல்ல முயன்றவர்களுக்கு ரூ.12,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பனைமரம் வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் உள்ள மரங்களை பொதுமக்கள் பராமரித்து மேலும் மரங்களை வளர்க்க முன்வரவேண்டும்.

  இதுபோன்று மரங்கள் வெட்டுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×