search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நுண்ணீர் பாசன திட்டம்
    X
    நுண்ணீர் பாசன திட்டம்

    நீலகிரியில் மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம்

    நீலகிரி மாவட்டத்தில் நுண்ணீர்பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    ஊட்டி:

    நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 2020-2021-ம் நிதி ஆண்டில் 4,315 ஹெக்டேர் பரப்பில் ரூ.1285 லட்சம் மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்கப்படவுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 0.40 ஹெக்டேர் முதல்அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை ஒரு விவசாயி இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட உள்ளது. எனவே நுண்ணீர்பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×