என் மலர்
செய்திகள்

கைது
திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சிய வியாபாரி
திருநாவலூர் அருகே உள்ள கள்ளமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் என்பவர் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தார்.
திருநாவலூர்:
திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு ஊளுந்தூர்பேட்டை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, குருபரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது திருநாவலூர் அருகே உள்ள கள்ளமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டம் (வயது 60) என்பவர் முந்திரி தோப்பில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து ஓடினார். உஷரான போலீசார் கோதண்டத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






